431. அந்தோணி முத்துவின் வார்த்தைகள் - உள்ளத்திலிருந்து !
என் இனிய கர்ணர்களே,
உங்கள் அன்பினாலும் தயவினாலும் எனக்கு மடிக்கணினி கிடைத்திருக்கிறது.
மனமெல்லாம் சந்தோஷத்தினால் பூத்துக் குலுங்குகிறது.
என் பழைய மேசைக் கணினிக்கும் இதற்கும் மலையளவு வித்தியாசம்.
அது Celeron 800 mhz processor, 128 mb RAM. சமயங்களில் ஆமை கூடத் தோற்று விடும்.
இது Core-2 Duo 1.83 Ghz processor, 2 Mb RAM, DVD Writer, Webcam, மற்றும் நிறைய வசதிகளைக் கொண்டது. அது ஆமை வேகம் என்றால் இது புலிப்பாய்ச்சல்.
அந்த டிசம்பர் மாதக் குளிரில் நடுங்கியபடி, கடவுளுக்கு நான் எழுதிய அந்தக் கடிதத்திற்கு எனக்கு இவ்வளவு அழகான பதில் கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை.
கடவுள் நேரிடையாக செயலாற்றுவதில்லை.
தாம் தேர்ந்தெடுத்த சில நல்ல மனிதர்களின் மூலமாகவே அவர் செயல்படுகிறார் என்று எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது.
அவரது செயல்களைச் செய்பவர்கள் அவராகவே மாறிவிடுகிறார்கள்.
இதை வெறுமனே ஒரு எலக்ட்ரானிக் பொருளாக என்னால் பார்க்க முடியவில்லை.
என் துன்பத்தைத் தங்களின் துன்பமாக உணர்ந்து….
நான் நலமாய் இருக்க வேண்டும் என மனதார விரும்பி….
பிரார்த்தனையோடு தங்களின் வியர்வைத்துளியையும் சேர்த்து….
மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு….
உருவாக்கப்பட்ட உயிருள்ள ஒரு ஜீவனாக இந்த மடிக்கணினியைப் பார்க்கிறேன்.
இத்தனைக்கும் இதற்காக உதவியவர்கள் எவரும் ஏதோ மாபெரும் கோடீஸ்வரர்களோ
வசதிகளில் புரள்பவர்களோ அல்ல.
அத்தனை பேருமே என் போன்ற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
அதனால்தானோ என்னவோ என் வலியையும் வேதனையையும் அவர்களால் முழுமையாக உணர முடிந்திருக்கிறதென நம்புகிறேன்.
நான் இதைத் திறந்து வேலை செய்யும்போதெல்லாம்,
இதற்கு உதவின, உதவ நினைத்த் அத்தனை அன்பு ஆத்மாக்களும்…
மனதளவில் என்னுடன் இருப்பதாக உணர்கிறேன்.
நான் தனியன் இல்லை எனக்காகவும் கவலைப்பட இத்தனை ஜீவன்கள் இருக்கிறார்கள் என்கிற உணர்வே ஆயிரம் யானைகளின் பலத்தைக் கொடுக்கிறது.
அனைவருக்கும் என்னுடைய கண்ணீர் கலந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
எல்லாம் வல்ல இறை சக்தி அனைவருக்கும் நீண்ட ஆயுளையும், விரும்பியதனைத்தையும் இடைவிடாது வழங்க மனமுருகிப் பிரார்த்திக்கிறேன்.
எவரஸ்ட்டின் உச்சிக்கு ஏறி இப்படி கத்த வேண்டும் போலத் தோன்றுகிறது.
நான் அதிர்ஷ்டக்காரன்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
Regards
Anthony Muthu.
7 மறுமொழிகள்:
Test Message !
//இது Core-2 Duo 1.83 Ghz processor, 2 Mb RAM, DVD Writer, Webcam, மற்றும் நிறைய வசதிகளைக் கொண்டது.
//
அந்தோணி, 2 GB RAM (Not MB!)
//உங்கள் அன்பினாலும் தயவினாலும் எனக்கு மடிக்கணினி கிடைத்திருக்கிறது.
மனமெல்லாம் சந்தோஷத்தினால் பூத்துக் குலுங்குகிறது.//
மகிழ்ச்சி தரும் செய்தி, அந்தோணிக்கு வாழ்த்துக்கள் ...
அந்தோணி முத்து வாழ்வில் மேன்மேலும் சிறந்து மகிழ்ச்சி பெற வாழ்த்துக்கள்
உங்களின் மகிழ்ச்சி தொடரவேண்டும்.
சங்கர், மஞ்சூர் ராசா,
அந்தோணியின் தன்னம்பிக்கை மிக்க பாராட்டுக்குரியது. அவர் நிச்சயம் முன்னுக்கு வருவார் என்பது என் திடமான நம்பிக்கை.
எ.அ.பாலா
Best Wishes to Anthony and to all sponsors.
Post a Comment